டிரைவரும் 4dயும்
4D for D(river)
Poem by N Rengarajan
Translated by Kokila Annamalai
நண்பர்கள் எடுக்கிறார்கள்
நாமளும் எடுப்போம்1வெள்ளிக்கு என்பதில் ஆரம்பித்தது.
அவ்வப்போது வாங்கி வந்த நான் ஆறுதல் பரிசில் அறுபது வெள்ளி
விழுந்தவுடன் அடிமையாகிட்டேன் போல..,
வாகனத்திற்கு
எரிபொருள் நிரப்புகையில்
கடைசியாக வரும் நம்பர்
Sure கன்னா - வாகும் என்று
என்னைவிட கலர் கூட உள்ள
நண்பர் சொன்னார்.
ஒருவருக்கு Accident ஆன
வாகன எண்ணில் நமக்கு
அதிஷ்டம் இருக்குமென்று
சமூகத்தில் பரவியிருக்கும்
விசித்திர நம்பிக்கைக்கு
நான் ஒன்னும் விதிவிலக்கல்ல.
இடிக்க வந்த வாகன எண்ணை
எழுதி எடுத்த பழக்கம்மும்முண்டு.
இந்த வகை நோய்
டிரைவர்களையே அதிகம் தாக்குவதால்
இதை 4dicron என்றுகூட சொல்லலாம்.
அவ்வப்போது அத்தனை மில்லியன்
இத்தனை மில்லியன் என்ற
அக்கப்போர் வேற
இதுல கொடுமை என்னவென்றால்
ஏற்கனவே வந்துவிட்ட result ஐ
குளித்துவிட்டு பார்த்தால்
நமக்குச் சாதகமாக
இருக்கும் என நினைப்பது.
இது ஒரு தீய பழக்கமென்று
வளர்க்கப்பட்டேன். ஆனால்
ஓயா பழக்கமாக
வளர்ந்து நிற்கிறது.
முத்து முத்தாய் எழுதியபோதே!
மாறாத தலைவிதி
இப்ப(டி )கிறுக்குவதிலா
மாறிவிடப்போகிறது.
It started like this:
My friends are doing it, so why don't I,
for just a dollar?
At first,
I was buying on occasion.
I suppose I was enslaved
by a consolatory win
of a mere $60.
A fairer-skinned friend said
the last few numbers that appear on the meter
when you’re filling up petrol
are a sure win!
I am not immune
to the morbid folk belief
that the license plate number
of someone involved in a tragic road accident
could turn out to be lucky for me.
I too have the habit of scribbling down the number
Of the colliding vehicle.
Because this sort of disease inflicts many drivers
You could even call it 4dicron.
Beyond the hassle of waiting to see if you made millions
There is the nonsensical ritual
of looking at the results again after a shower
expecting the numbers to morph
to your advantage
I was raised to believe that gambling is a vice to stay away from
But now, it is vice-versa, a relentless addiction
My fate that wasn’t transformed
by my beautiful, pearl-like writing
How will it be transformed
By these hastily-scribbled numbers?
Editor’s note: 4D is the local lotto in Singapore.
N Rengarajan was born in Pudukkottai, Tamil Nadu, India, and came to Singapore in 2014 to work in the construction sector. His poems are often satirical and poke fun at politicians and social ills. He has won awards at several poetry competitions in India and Singapore. His favourite poet is the Tamil poet and lyricist Vaali.
Kokila Annamalai is an abolitionist, feminist organiser, facilitator, writer and storyteller who works and plays in emancipatory movement spaces in Singapore. She is committed to a praxis of care, attentiveness, imagination and abundance, that centers and is grounded in history, community, different forms of wisdom, and the power of ordinary people. @learningfromthemargins